காஜு ஈஸி பேல்
தேவையானவை:
உடைத்து, வறுத்த முந்திரி – 50 கிராம்,
பொரித்த அவல் – ஒரு கப்,
எலுமிச்சை – அரை மூடி (சாறு பிழியவும்),
நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை,
கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொத்த மல்லித்தழை தவிர மற்ற பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.