Home சமையல் புதிது சுறுசுறுப்பா இப்பவே பண்ணுங்க இந்த பருப்பு போண்டா!

சுறுசுறுப்பா இப்பவே பண்ணுங்க இந்த பருப்பு போண்டா!

parupu poonda

பருப்பு போண்டா

தேவையானவை:
கடலைப்பருப்பு – அரை கப்,
துவரம்பருப்பு – அரை கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
மல்லித்தழை – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
தேங்காய் துருவல் – கால் கப்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவைக்கு,
பூண்டு – 5 பல்.

அரைக்க:
சோம்பு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:
பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். சோம்பு, மிளகாய் இரண்டையும் அரைத்து அதனுடன் சேருங்கள். வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கி சேருங்கள்.

தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து எடுங்கள். எண்ணெயைக் காய வைத்து உருண்டைகளாக பொரித்தெடுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version