
டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை
தேவையானவை:
ஓட்ஸ். – ஒரு கப், பேரீச்சம்பழம். – 10 (விதையற்றது), பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், வெல்லம் – பெரிய எலுமிச்சம் பழ அளவு, அரிசி மாவு – ஒரு கப், நெய். – ஒரு டீஸ்பூன், உப்பு. – ஒரு சிட்டிகை.
செய்முறை:
ஓட்ஸ், பொட்டுக்கடலையை மிக்ஸியில் தூளாக்கவும்.. கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி… வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஓட்ஸ் – பொட்டுக்கடலை பொடி சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்தால்… பூரணம் தயார்.
பேரீச்சம்பழத்தை நடுவில் நீள வாட்டில் பிளந்து பூரணத்தை ஸ்டப் செய்து கொள்ளவும். கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவுக் கலவை எடுத்து, உருட்டி குழி செய்து, அதில் டேட்ஸ் – ஓட்ஸ் பூரணத்தை வைத்து மூடவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புதுமையான, சத்தான டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை தயார்.