ஏப்ரல் 22, 2021, 7:22 மணி வியாழக்கிழமை
More

  கனவின் விளைவு: இப்படி கண்டால் அதிர்ஷ்டம் வரப்போகிறது!

  dream-1

  உங்களுடைய கனவில் வெள்ளை அரளி, வெள்ளை மல்லி, வெள்ளை தாமரை, வெள்ளை குதிரை இவைகள் வந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை குறிக்கும்.

  குறிப்பாக வெள்ளை நிறத்தில் எந்த பொருள் வந்தாலும் அது நன்மை தான். அதிலும் வெள்ளை நிற பசு, அதாவது வெள்ளை நிற கோமாதா உங்கள் கனவில் தோன்றினால் நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கும் வேண்டுதல், கூடிய விரைவில் நிறைவேற போவதை குறிப்தாக சொல்லப்பட்டுள்ளது.

  பிரம்ம முகூர்த்த நேரத்தில் ருத்ராட்ச மாலையோ, ருத்ராட்சத்தை அணிந்து இருப்பவரோ, ருத்ராட்சம் சம்பந்தப்பட்ட எந்த கனவு உங்களுக்கு வந்தாலும், சிவனின் அருளும் ஆசீர்வாதமும் விரைவாக உங்களுக்கு கிடைக்கப் போவது என்பதை குறிக்கும். கட்டாயம் 48 நாட்களுக்குள் சிவனின் அருள் உங்களுக்கு கிடைத்து விட்டதை உணர்த்தும் அளவில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவனின் தலையில் இருக்கும் பிறைநிலா உங்களது கனவில் வந்தாலும் நல்லதே நடக்கப்போகிறது என்பது தான் அர்த்தம்.

  ஆதிசேஷனான ஐந்து தலை நாகம் உங்களது கனவில் வந்தால், விஷ்ணுவின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் போவதை குறிப்பதாக அர்த்தம். மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைத்தால், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

  எதிர்பாராத வரவினை நீங்கள் எதிர்பார்க்கலாம். பாம்பானது படமெடுக்கும் கோலத்தில் கனவில் வரலாம். படுத்திருக்கும் நிலையில் தான் கனவில் வரக்கூடாது என்று கூறுவார்கள். அதே பாம்பு உங்களை கடித்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் விபத்து ஏற்படும்

  தண்ணீர் நிரம்பிய குடம், அதாவது நிறைகுடம் உங்களது கனவில் வந்தால், குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்பதை கடவுள் வலியுறுத்துவதாக அர்த்தம். இந்தக் கனவு உங்களுக்கு வரும் பட்சத்தில் முடிந்தவரை தினம்தோறும் குலதெய்வத்தை மறக்காமல் வீட்டிலிருந்து நினைத்து, நீங்கள் பூஜை செய்வது நல்லது.

  அதாவது நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மறைந்தாலும், உங்கள் குலதெய்வம் உங்களை மறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிறைகுடம் உங்கள் கனவில் வந்தால் எப்படியாவது உங்க குல தெய்வ கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்திருங்க! அது ரொம்ப நல்லது.

  சாதுக்கள், முனிவர்கள் இப்படிப்பட்டவர்கள் உங்களின் கனவில்வந்தால், அந்த கடவுளே வந்து உங்களை ஆசிர்வாதம் செய்ததாக அர்த்தம். உங்களுக்கு இருக்கக் கூடிய பெரிய பிரச்சனையில் இருந்து விடிவுகாலம் கிடைக்கப் போகிறது என்பதை இது குறிக்கிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »