Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: பொட்டுக்கடலை கருணைக்கிழங்கு வடை!

ஆரோக்கிய சமையல்: பொட்டுக்கடலை கருணைக்கிழங்கு வடை!

vada

பொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை

தேவையானவை:
பொட்டுக்கடலை. – 150 கிராம், கருணைக்கிழங்கு – 200 கிராம்,
பெரிய வெங்காயம். – 2 (நறுக்கவும்),
பச்சை மிளகாய். – 2,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
இஞ்சி, பூண்டு விழுது,
கொத்தமல்லி, கறிவேப்பிலை பட்டை, சோம்பு – சிறிதளவு,
எண்ணெய். – பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு. – தேவைக்கேற்ப.

செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத் தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version