பிப்ரவரி 24, 2021, 11:39 மணி புதன்கிழமை
More

  இப்படி செய்யுங்க டபுள் பீன்ஸ் அவியல்!

  Home சமையல் புதிது இப்படி செய்யுங்க டபுள் பீன்ஸ் அவியல்!

  இப்படி செய்யுங்க டபுள் பீன்ஸ் அவியல்!

  aviyal

  டபுள் பீன்ஸ் அவியல்

  தேவையானவை: காய்ந்த டபுள் பீன்ஸ். – ஒரு கப், முருங்கைக்காய், கேரட் – தலா ஒன்று, மஞ்சள்தூள். – ஒரு சிட்டிகை, தயிர். – அரை கப், தேங்காய் எண் ணெய். – 3 டேபிள்ஸ்பூன், உப்பு. – தேவைக்கேற்ப.

  அரைத்துக் கொள்ள: பச்சை மிளகாய் – 2, துருவிய தேங்காய். – அரை கப்.

  செய்முறை: டபுள் பீன்ஸை 6 மணி நேரம் ஊறவிடவும். கேரட், முருங்கைக்காயை நீள வாக்கில் நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கேரட், முருங்கைக்காய், டபுள் பீன்ஸை சேர்த்து… உப்பு, மஞ்சள்தூளை போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு, வேக வைக்கவும். முக்கால் வேக் காடு வெந்ததும் அரைத்த விழுதைக் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்க வும்.

  இதை சாதம், சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari