October 28, 2021, 4:00 am
More

    ARTICLE - SECTIONS

    நீங்க ட்ரை பண்ணுங்க.. மாங்காய் வேப்பம்பூ பச்சடி!

    manko neempu patchadi 1
    manko neempu patchadi 1

    மாங்காய் வேப்பம்பூப் பச்சடி

    தேவையான பொருட்கள்:
    மாங்காய் – ஒன்று வேப்பம்பூ (காய்ந்தது) – ஒரு கைப்பிடி அளவு,
    பொடித்த வெல்லம் – 100 கிராம் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் – ஒன்று
    தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு – தேவையான அளவு.

    தாளிக்க:
    கடுகு – ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

    செய்முறை: மாங்காயைத் தோல் சீவி நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயைச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.
    வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, வேப்பம்பூவைச் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வேகவைத்த மாங்காயுடன் தாளித்த கடுகு – வேப்பம்பூவைச் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். பொடித்த வெல்லத்தையும் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

    குறிப்பு: வாழ்க்கையில் கசப்பு, இனிப்பு என்று எல்லாமே இருக்கும். இதை உணர்த்த கசப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உப்பு, காரம் சேர்த்து இந்தப் பச்சடியை தமிழ்ப் புத்தாண்டில் தயாரித்து வருவது நமது வழக்கத்தில் உள்ளது. வாழ்க்கைத் தத்துவத்தை எளிதாக உணர்த்துவதால் இதற்குத் `தத்துவப் பச்சடி’ என்கிற பெயரும் இருக்கிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,589FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-