பிப்ரவரி 24, 2021, 9:32 மணி புதன்கிழமை
More

  பசியைத் தூண்டும் பனங்கிழங்கு துருவல்!

  Home சமையல் புதிது பசியைத் தூண்டும் பனங்கிழங்கு துருவல்!

  பசியைத் தூண்டும் பனங்கிழங்கு துருவல்!

  Palmyra-tuber-thuruval
  Palmyra-tuber-thuruval

  பனங்கிழங்கு துருவல்

  தேவையான பொருட்கள்

  பனங்கிழங்கு. – 5
  சிறிய வெங்காயம். -10
  காய்ந்த மிளகாய் வற்றல். -3
  பூண்டு பற்கள். -8
  மஞ்சள் தூள். – 1/2டீஸ்பூன்
  பெருங்காயத்தூள். -1/8டீஸ்பூன்
  தேங்காய் எண்ணெய். – 2 டேபிள் ஸ்பூன்
  உப்பு -தேவையானஅளவு
  கடுகு. -1/4டீஸ்பூன்
  சீரகம். -1/4டீஸ்பூன்
  கருவேப்பில்லை. -இரண்டு கொத்து
  பச்சை மிளகாய். – 1
  குடமிளகாய். -1/2
  தக்காளி. -. 1
  நெய். -2டீஸ்பூன்

  செய்முறை
  பனங்கிழங்கின் தோல் நீக்கி இரண்டாக கீரி அதன் உட்புறம் உள்ள குறுத்தை(குச்சி) அகற்ற வேண்டும். பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்
  ஒரு பாத்திரத்தில் கழுவிய கிழங்கு 3 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்(பொதுவாக கிழங்கின் மனம் நன்றாக வரும் வரை வேக வைக்க வேண்டும்)

  கிழங்கு நன்றாக வெந்த பின், வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும். கிழங்கு நன்றாக குளிர்ந்த பின், அதன் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

  பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்) அதன் பின் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் வற்றல்,3 சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பில்லை சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்.

  மீதமுள்ள சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  பின்பு கருவேப்பில்லை, பச்சை மிளகாய், அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும். பின்பு துருவிய கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு மசாலாவுடன் சேரும் வரை 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.

  இறுதியாக நெய் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும். சுவையான பனங்கிழங்கு துருவல் தயார்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari