May 11, 2021, 1:04 am Tuesday
More

    பீட்ரூட் வேண்டாம் சொல்லும் குழந்தைங்க இப்படி செஞ்சா சாப்பிடுவாங்க!

    Beetroot-Cutlet
    Beetroot-Cutlet

    பீட்ரூட் கட்லெட்
    தேவையான பொருள்கள் :

    உருளை கிழங்கு. – கால் கிலோ
    துருவிய பீட்ரூட் – 1 கப்,
    கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
    தனியா தூ. – 1/2 டீஸ்பூன்,
    சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு. – தேவையான அளவு,
    மைதா மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
    ரஸ்க் தூள் – தேவையான அளவு,
    எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    உருளை கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்
    ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், கடலை மாவு, உருளை கிழங்கு , உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலா சேர்த்து நன்றாகப் பிசையவும்.

    இந்தக் கலவை கெட்டியாக இருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவைப் போட்டு, 1/4 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

    பிசைந்து வைத்திருக்கும் பீட்ரூட் கலவையை சிறு சிறு வட்டமாகத் தட்டி மைதா மாவுக் கரைசலில் ஒரு முறை முக்கி எடுத்து, ரஸ்க் தூளில் நன்கு இரண்டு புறமும் புரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கவும். எண்ணெயைக் காய வைத்து, தட்டி வைத்த பீட்ரூட் கட்லெட்களை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,234FansLike
    0FollowersFollow
    19FollowersFollow
    74FollowersFollow
    1,178FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »