May 14, 2021, 3:38 am Friday
More

    ஆளை அசத்தும் ஆலு மசாலா போளி!

    alu-masala-poli
    alu-masala-poli

    உருளைக்கிழங்கு மசாலா போளி
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு – 4
    கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
    முந்திரி பருப்பு – எட்டு
    மைதா மாவு – இரண்டு கப்
    பச்சை மிளகாய் – ஒன்று
    கறிவேப்பில்லை – சிறிதளவு
    கொத்தமல்லி – சிறிதளவு
    கடுகு – ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
    உப்பு – தேவைகேற்ப
    நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி
    நெய் – தேவையான அளவு

    செய்முறை :

    • உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
    • ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
    • அடுத்து அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
    • பிறகு, ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி நடுவில் உருளைக்கிழங்கு பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.
    • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
    • சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி தயார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,242FansLike
    0FollowersFollow
    19FollowersFollow
    74FollowersFollow
    1,185FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »