
சோயா பொங்கல்
பச்சரிசி – 1 தம்ளர்,
சோயா – 1 தம்ளர்,
கொழுப்பு நீக்கப்பட்ட பால் – 1/2 தம்ளர்,
சீரகம் – 2 தேக்கரண்டி,
மிளகு – 2 தேக்கரண்டி,
இஞ்சி – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி.
செய்முறை
சோயாவை ஒன்றிரண்டாக உடைத்து, தோலை புடைக்கவும்.
அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, பொங்கலுடன் சேர்க்கவும். குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும். நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்