Homeசமையல் புதிதுகுழம்புக்கு கூட சேர்க்கலாம்.. கத்தரிக்காய் வற்றல்!

குழம்புக்கு கூட சேர்க்கலாம்.. கத்தரிக்காய் வற்றல்!

brinjal vatral - Dhinasari Tamil

கத்திரிக்காய் வற்றல்

தேவையானவை:
கத்திரிக்காய் – ஒரு கிலோ
புளி – பெரிய எலுமிச்சையளவு
உப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை:
கத்திரிக்காயைக் கழுவி இதன் காம்பை மட்டும் நறுக்கி விடவும். சதைப்பகுதியை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் போட்டு வைப்பதால், கத்திரிக்காய் கறுத்துப் போகாது. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதனுடன் ஊற வைத்த புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளைப் சேர்த்து வேக விடவும்.

பாதி வெந்தவுடன் கத்திரிக்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு கத்திரிக்காயை தட்டில் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்து வெயில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும்.

இந்தக் கத்திரிக்காய் வற்றலை வைத்து நாம் தினசரி செய்யும் காய்கறி சாம்பார் போலவே சாம்பார் செய்யலாம். கத்திரிக்காய் வற்றலை சாம்பார் செய்வதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரீல் ஊற வைத்துக் கொள்ளவும்.

இந்த வற்றலை நன்றாக காயவைத்து எடுத்து வைத்தால், ஒரு வருடம் வரை கெடாது. காய்கறி விலை அதிகமாக விற்கும் காலங்களில் இந்த வத்தலை உபயோகித்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்யும் போது இந்த வத்தலை சேர்த்து குழம்பு செய்யலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,076FansLike
380FollowersFollow
78FollowersFollow
74FollowersFollow
4,161FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி..

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில்...

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

சர்தார் -விமர்சனம்..

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும்...

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும்...

Latest News : Read Now...

Translate »
Exit mobile version