
கூட்டு, குழம்பு வடாம்
தேவையானவை :
வெள்ளைக்காராமணி – ½ கிலோ,
தோல் நீக்கிய முழு உளுந்து – ½ கிலோ, வெள்ளைப் பூசணிக்காய் – ½ கிலோ, மிளகாய் வற்றல் – 20 (அ) 25,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையானது.
கறிவேப்பிலை – கொஞ்சம்.
செய்முறை :
காராமணியையும், உளுந்தையும் கல்லரித்து, தனித்தனியாக ஊறப்போடவும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு, உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து ஒன்றாக, கெட்டியாக அரைத்தெடுக்கவும். பூசணிக்காயைத் தோல் சீவி காரட் சீவியில் சீவவும். அதிலிருந்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து விட்டு அதையும் மாவில் சேர்க்கவும். கறிவேப்பிலையையும் சிறிது சிறிதாகக் கிள்ளிச் சேர்க்கவும். இதுவும், இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவு, சற்று கரகரப்பாகவே இருக்கலாம். காலையில் பிளாஸ்டிக் ஷீட்டில், மாவை சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி வைக்கவும். இந்த வடாம் உருண்டையாக இருப்பதால், காயகூட ஒன்றிரண்டு நாள் பிடிக்கும். இதை எண்ணெயில் வறுத்து, கூட்டு மற்றும் சாம்பாரில் சேர்க்கலாம்.