October 16, 2021, 1:39 pm
More

  ARTICLE - SECTIONS

  அந்த விஷயத்துல வெட்கமே இருக்காது! சாப்பிடுங்க லஜ்ஜைக்கெட்டகீரை!

  matcha Kota kirai 1 - 1

  இலச்சை கெட்ட மரம் என்றழைக்கப்படும் சண்டிக் கீரை மரம், பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய வகை மரமாகும். இந்தியாவின் தீவுகளான அந்தமான் கடற்கரையை ஒட்டிய காடுகளில் அதிக அளவில் காணப்படும் இந்த சண்டிக் கீரை மரங்கள், தற்காலத்தில், வீடுகளில், இதன் மருத்துவ பயங்களுக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

  அதிக உயரமாக வளராமல் சற்று வளைந்து வளரும் தன்மை கொண்ட இந்த மரங்களின் இலைகள் அகலமாக, காணப்படும். இந்த மரத்தின் பட்டைகள் வெண்ணிறத்தில் காணப்படும். அரிதாக பூக்கும் சண்டிக் கீரை மரத்தின் மருத்துவ பலன்களை, இதன் இலைகளே, தருகின்றன.

  இந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்!

  தமிழக கிராமங்களில் உள்ள வயதான பெருசுகளிடம் கேட்டால் நாகரீகமாக இருப்பவர்கள் ‘நச்சுக்கொட்டை கீரை என்றும், நக்கலான பெருசுகளிடம் கேட்டால் லஜ்ஜை கெட்ட கீரை என்றும் சொல்வார்கள்! சில இடங்களில் ‘சண்டிக்கீரை’ என்றும் இந்தக் கீரைக்கு பெயர் சொல்கிறார்கள்.

  இதன் பெயரிலேயே சங்கதியைச் சொல்லி விட்டார்கள் நம் முன்னோர்கள்.
  ‘லஜ்ஜை’ என்றால் வெட்கம். கீரைக்கு எதுக்கு வெட்கம்!? என்றால், இந்தக்கீரை சாப்பிட்டால்.வெட்கம் போய்விடும், கூச்சமில்லாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கத்தோன்றுமாம்! எதை? அதைதான்…!

  இந்தக்கீரையை சிலர் ‘சண்டிக்கீரை’ என்றும் சொல்கிறார்களே, ஏன் என்று சிந்தியிங்கள். ’சண்டி’ என்றால் என்ன? சண்டிக்குதிரை என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் இல்லையா, அப்படி அழைப்பதற்கு என்ன காரணம்? சாதாரண குதிரையில் யார் வேண்டுமானாலும் சவாரி செய்யலாம்! சண்டிக்குதிரையைச் சமாளிக்க அபார ‘திறமை’ இருக்க வேண்டும்!

  அந்த வலிமையைத்தந்து உங்களையும் உங்கள் இணையையும் வெட்கம் மறந்து வேட்கை தீர்க்க தூண்டுமாம் இந்த லஜ்ஜை கெட்டகீரை! இது மரமாக வளரக்கூடியது. கிராமப்புறங்களில் இதை அதிகமாக பார்க்க முடியாது. நகர்புற வீடுகளில் இதன் சிறப்புத் தெரியாமல் இதை குரோட்டன்ஸ் போல அழகுக்கு வளர்க்கின்றனர் பலர்.

  Pisonia grandis என்பது இதன் தாவரவியல் குடும்ப பெயர். அந்தக்காலத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த பிசோன் என்கிற மருத்துவரை கவுரவிக்க வேண்டி அவர் பெயரையே இதற்கு வைத்துவிட்டனர்.

  கிரேண்டிஸ் என்பது இதன் பெரிய இலைகளுக்காக கிடைத்த பெயர். ஆரோக்கியமான லஜ்ஜை கெட்ட கீரையின் இலை, ஒரு அடி நீளமும் அரை அடி அகலமும் இருக்கும். இது அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு காடுகளில் பெருமளவு காணப்படுகிறது.

  இதில் ஆண் மரம் பெண் மரம் என இரண்டு வகைகள் உண்டு. ஆண்மரம் சற்று உயரமாக வளரும். இதன் இலைகள் அடர் பசுமை நிறத்தில் இருக்கும், பெண் இலைகள் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் இருக்கும்.ஆண் மற இலையை விட பெண் மர இலை மென்மையானதாக இருக்கும். இந்த இலைகளில்தான் எல்லா மாயங்களும் மருந்துகளும் இருக்கின்றன!

  பொதுவாகவே இந்த இலைகளில் வைட்டமின் ‘ஏ’ ‘தையாமின்’ ‘ரிபோபிளவின்’ வைட்டமின் ‘சி’ ஆகியவை உள்ளன. மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்து. பர்ஃபார்மென்ஸ் சரியில்லாத ஆண்களை மூட்டுச்செத்தவன் என்று சொல்வது கிராமப்புற ரகசிய வார்த்தை.

  தொடர்ந்து பதினைந்து நாள் இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள உங்கள் மூட்டுக்கள் புது பலம் பெரும். அதோடு சிறு நீர் பெருகும். ரத்தம் சுத்தமாகும்.

  இதை மூன்று விதமாக சமைக்கலாம். லஜ்ஜை கெட்ட கீரையின் இலைகள் ஐந்தாறு, ஒரு தக்காளி, நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயம், கொஞ்சம் மிளகு சேர்த்து வேகவைத்து சூப்பாக சாப்பிடலாம்.

  அடுத்தது, பாசிப்பருப்பு, சீரகம், தேங்காய், காய்ந்த மிளகாய் சேர்த்து லஜ்ஜை கெட்ட கீரையை கூட்டு செய்து, சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்சேர்த்து சாப்பிடலாம்.

  நான் வெஜ் பிரியர்களுக்கு – ஆட்டு ரத்தம் கொஞ்சம் வாங்கி வாருங்கள். பெண் லஜ்ஜை கெட்ட கீரையின் இலைகள் கொஞ்சம் பறித்துக் கொள்ளுங்கள். சட்டியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி, சோம்பு போட்டு தாளியுங்கள்.

  அதில் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கீரையை வதக்குங்கள். பதமாக வதங்கி வந்ததும் கொஞ்சம் சீராக தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் ஆட்டு ரத்தத்தை கரைத்து உற்றி, அளவாக உப்பு போட்டுக் கிளறுங்கள். ரத்தம் வெந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் போதும். தரமான ஆர்கானிக் வயக்ரா ரெடி.

  பெரியவர்கள் முதல் பெண்மணிகள் சிறுவர் வரை, அனைவரும் சூழ்நிலைகளின் காரணமாக, சரியான வசதிகள் இன்மையாலும் சிறுநீரை அடக்கும் நிலைமை ஏற்படும், அதனால், சிறுநீர்ப்பையில் வெளியேற வழியின்றி தேங்கும் சிறுநீரே, உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கிவிடுகின்றன.

  உடலில் கலந்து, அசுத்த நீராக மாறி, உடலை வீங்கச்செய்கிறது. சிலருக்கு கால்களில் வீக்கம் மற்றும் முகத்தில் வீக்கம் இதனாலேயே, உண்டாகும். சிலருக்கு இதன் காரணமாகவே, சிறுநீர்ப் பையில் கற்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையே நாளடைவில், இரத்தத்தில் அசுத்த உப்புகளாக மாறி, பல்வேறு வியாதிகள் வருவதற்கு காரணமாக அமைகின்றன. சிலருக்கு நாள்பட்ட வீக்கங்கள் கற்கள் போல இறுகி, உடல் பருமனை அதிகரித்து, நடப்பதற்கும், உட்காருவதற்கும் சிரமங்கள் தரும் வகையில் அமைகின்றன.

  ரத்த அழுத்தம் சமன் : இப்படி சிறுநீரக பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, உற்ற நிவாரணமாக, சண்டிக் கீரைகள் திகழ்கின்றன. சண்டிக் கீரைகள் உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. இரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சீராக்கி, உடலை நலமாக்க கூடியது.

  சிறுநீரகத்தில் தேங்கிய நீரால் ஏற்பட்ட உடல் பருமனை, குறைக்கும் வல்லமை மிக்கது. சிறுநீரகத்தை தூய்மை செய்து, உடலில் உள்ள அசுத்த நீரை வெளியேற்றி, சிறுநீரகத்தை வலுவாக்கக்கூடியது, சண்டிக்கீரை.

  உழைப்பு இல்லாதிருத்தல், வயதிற்கு தக்க உணவுகளை எடுத்துக்கொள்ள தவறுதல் போன்ற காரணங்களால், எலும்பு மஜ்ஜை தேய்மானம் ஏற்படும் போது, ஆண்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் மூட்டு வலிகளால் அல்லல் அடைகின்றனர். இதைப் போக்க, சண்டிக் கீரையை தினமும் உணவில் சேர்த்து வர, கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள், மூட்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்துவிடும்.

  சண்டிக் கீரை தேநீர் சண்டிக் கீரையை நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, தண்ணீரில் இட்டு சுட வைத்து, வெந்தயத் தூள் சேர்த்து பின்னர் வடிகட்டி, தினமும் பருகி வர, சிறுநீர் நன்கு பிரியும்.

  சண்டிக் கீரை மசியல்: நன்கு சுத்தம் செய்த சண்டிக் கீரையை சற்று கொதிக்க வைத்து, அதை தனியே வைத்துக்கொள்ளவும். பாசிப் பருப்பை நன்கு வேக வைத்து, தனியே வைத்து கொள்ளவும்.

  Chanti kirai - 2

  ஒரு வாணலியில், வெங்காயம், சீரகம் இரண்டு மிளகாய்களை எண்ணையில் சற்று வதக்கி, பின்னர் வேக வைத்த பாசிப்பருப்பை அதில் கலந்து, அத்துடன் தனியே வைத்துள்ள சண்டிக் கீரையையும் சற்று மசித்து வாணலியில் இட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூள், இந்துப்பு தூவி, மிதமான சூட்டில் வேக வைக்கவும். உங்க உடல் எடையை குறைக்கவும் இன்னும் பிற நன்மைகளை பெற முன்னோர்கள் குடித்த இந்த ஜூஸை குடியுங்கள்

  நன்கு வெந்த பதம் வந்ததும், இந்த சண்டிக் கீரை மசியலை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துகொண்டு, மதிய உணவில், சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம், காலை மற்றும் இரவு சிற்றுண்டி நேரங்களில் தோசை மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேறும்.

  சிறு நீர் பிரியும் : சண்டி கீரை மசியலை அடிக்கடி உணவில் சேர்த்துவர, உடலில் உள்ள அசுத்த நீர் எல்லாம் வெளியேற ஆரம்பிக்கும். சிறுநீர் நன்கு பிரியும், உடலில் இதுவரை இருந்த வீக்கங்கள் எல்லாம், குறைந்து, முகமும் பொலிவாகி, உடலும் நலமாகும்.

  பருவ நிலை மாற்றங்கள் மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இருமல் மற்றும் சளி பாதிப்பால் சிரமப்படுகின்றனர். நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படுவதால், இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைப்போக்க, சண்டி கீரையில் உள்ள தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்தே, பேருதவி செய்யும். சண்டி கீரை மசியலை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டுவர, நுரையீரல் பாதிப்புகள் விலகி, சளித் தொல்லைகள் நீங்கிவிடும்

  பனி காலங்களில் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி தொல்லையால் சிரமப்படுகின்றனர். இரத்தத்தில் உள்ள கழிவுகள் நுரையீரலில் தங்குவதால் தொடர் இருமலும், சளி தொந்தரவும் ஏற்படுகிறது. மூட்டு வலி மற்றும் இருமல், சளி தொந்தரவை அகற்றும் சக்தி சண்டிகீரையில் அதிக அளவில் உள்ளது.

  இதில் உள்ள நார் மற்றும் இரும்பு சத்து எளிதாக நிவாரணத்தை வழங்கும். தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாவதோடு, சளி, இருமல் தொந்தரவும் ஏற்படாது.

  அரிசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் குடற்புண்கள் ஆறும்.

  வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்க நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு சீரகம், பூண்டு, வெங்காயம் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் , அனைத்தும் தீரும்.

  வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள்
  •உடல் பருமன் குறைய நச்சுக்கொட்டைக்
  கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து
  அதனுடன் பாதி அளவு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

  கழுத்து வலி, இடுப்பு வலி குணமாக நச்சுக்கொட்டைக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்கள் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-