Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: முளைக்கீரை மசியல்!

ஆரோக்கிய சமையல்: முளைக்கீரை மசியல்!

mulaikirai masiyal
mulaikirai masiyal

முளைக்கீரை மசியல்
தேவையானவை:
முளைக்கீரை – ஒரு கட்டு,
பாசிப்பருப்பு – அரை கப்,
பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 1,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒரு முறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version