மேத்தி தேப்லா
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
கடலை மாவு – கால் கப்,
வெந்தயக்கீரை – அரை கட்டு,
ஓமம் – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
சர்க்கரை – சிறிது,
தயிர் – மாவு பிசைய தேவையான அளவு.
செய்முறை:
கொடுக்கப் பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக்கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்க்கவும். இதை தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.