
கருணைக் கிழங்கு பொடி
மூல நோய் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த கருணைக் கிழங்கு பொடியை பயன்படுத்த சிறந்த பலனை பெறலாம். கிழங்கு வகைகளிலேயே உடலுக்கு நன்மையை அளிக்கும் ஒரே கிழங்கு என்றால் அது கருணைக் கிழங்கு தான். அதனால் இந்த கருணைக் கிழங்கு பொடியை அனைவரும் பயன்படுத்த உடல் கழிவுகள் வெளியேறும், உடல் பலப்படும்.
தேவையான பொருட்கள்
பெரிதான நான்கைந்து கிழங்கு கருணைக் கிழங்கு
2 ஸ்பூன் மிளகு
4 ஸ்பூன் தனியா
கல் உப்பு
4 கரண்டி நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் கருணைக் கிழங்கை நன்கு சுத்தப்படுத்தி வேகவைத்துக் கொள்ளவேண்டும். வெந்த பின் தோல் நீக்கி சிறிது சிறிதாக வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனை நல்ல உச்சி வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர்த்தன்மை இல்லாத அளவு உலர்த்த வேண்டும்.
• பின் ஒரு வாணலியில் மிளகு, தனியா, உப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவேண்டும்.
வறுத்தவற்றை ஒரு தட்டில் எடுத்து விட்டு அந்த வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு உலர்ந்த கருணையை சிவக்க வறுக்கவும்.
இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
கருணைக் கிழங்கு பொடி தயார்.