
ராகி கார புட்டு
தேவையான பொருட்கள்
• 2 கப் ராகி மாவு / கேழ்வரகு மாவு ((முளைகட்டிய கேழ்வரகு மாவினை எடுக்க சத்துக்கள் கூடும்.))
2 ஸ்பூன் நல்லெண்ணெய்
•1/4 ஸ்பூன் கடுகு
•1/4 ஸ்பூன் உளுந்து
•/4 ஸ்பூன் சீரகம்
2 வர மிளகாய்
சிறிது கறிவேப்பிலை
• /4 கப் சின்ன வெங்காயம்
உப்பு
2 ஸ்பூன் மோர் ((புளிப்பு சுவைக்காக தேவைப்பட்டால்))
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சிறிது
உப்புடன் கலந்து எடுத்து அதில்
தண்ணீரை சிறிது சிறிதாக தூவி.நன்கு
கட்டியில்லாமல் கலந்துகொள்ளவேண்டும்.
மாவினை கைகளால் கொழுக்கட்டைப் போல் பிடித்தால் பிடிக்கவரவேண்டும்.
அதேபோல் அழுத்தினால் மணல் போல்
உதிர வேண்டும். இந்த பக்குவத்திற்கு மாவினை கலக வேண்டும்.
அதிகமாக தண்ணீருடன் சப்பாத்தி பதத்திற்கு இருக்கக் கூடாது. மாவு ஈரத்துடன் மணல் மணலாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீரில் கலந்த பின் சல்லடையில் சளித்துக் கொள்ளலாம். கட்டிகள் இருந்தால் தேய்த்துவிட்டு உதிர்த்து விடலாம். இவ்வாறு ஈர மாவு தயாரான பின் ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் ஈர
துணியை வைத்து நீராவி தயாராக
வைக்க வேண்டும்.
அதில் மெதுவாக, சலித்த மாவினை தட்டில் சமமாக பரப்பி அங்கங்கே ஆள்காட்டி விரலால் துளைகளை இட் மூடிவைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் ஆவி நன்கு வெளியேறி மாவு சமமாக வேகும். இதனை பத்து நிமிடம் ஆவியில் வேகவைக்க வேண்டும்.
பத்து நிமிடங்கள் கழிந்த பின் மாலில் கைகளால் உருட்டி பார்க்க நன்கு திரண்டு உருட்ட வந்தால் மாவு நன்கு! வெந்துள்ளது என தெரிந்துக் கொள்ளலாம்’
பின் தண்ணீர் தெளித்து நீராவியில் இருந்து இட்லி தட்டை எடுத்து வேறொரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய்
சூடானதும் கடுகு உளுந்து பருப்பு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும் பிறகு கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும். வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக
வரும்வரை வதக்கவும்.
உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும் ராகியை வேகவக்க உப்பு சேர்த்திருப்பதால் இதற்கு மட்டும் உப்பு
பார்த்து சேர்க்கவும். விரும்பினால் இதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மோர் சேர்த்துக்கொள்ளலாம்.
இதனுடன் வேகலைத்து எடுத்துவைத்திருக்கும் ராகியை சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பூ, சேர்க்கவும்.
அவ்வளவுதான் சுலையான ராகி கார புட்டு தயார்.
இதனை செட்டிநாடு சும்மா குழம்புடன் சேர்த்து சாப்பிட சுவைஅதிகமாக இருக்கும்.