
செட்டிநாட்டு ஸ்பெஷல் வெள்ளை பணியாரம்
தேவையானபொருட்கள்
1 கப் தூயமல்லி பச்சரிசி ((குவியலாக எடுக்காமல் சமமாக எடுக்க வேண்டும். தூயமல்லி அரிசியில் பச்சரிசியாக
இருக்கவேண்டும்.))
2 ,3 ஸ்பூன் உளுந்து ((பொதுவாக.
அரிசிக்கு மேல் குவியலாக உளுந்தை
வைக்க எவ்வளவு நிற்கிறதோ அதுவேஅளவு)
செக்கு கடலை எண்ணெய் •
தேவையான அளவு – உப்பு ((பொதுவாக
வெள்ளை பணியாரத்திற்கு சற்று உப்பு
குறைவாக சேர்ப்பது சிறந்தது))
செய்முறை
• தூயமல்லி அரிசி மற்றும் உளுந்தை சேர்த்து நன்கு சுத்தம் செய்து கழுவி 2மணி நேரம் மாறவிடவும்..
பிறகு சிறிது உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும் (தோசை மாவு
பதத்தில் இருக்க வேண்டும்). •அடிதட்டையாக இருக்கும் இரும்பு. வாணலியில் எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை
எண்ணெயில் ஊற்றவும். • ஒவ்வொரு முறையும் மாவை நன்கு
கலக்கி விட்டபின் ஒவ்வொன்றாக மட்டுமே சுஈட்டெடுக்கவும்.
• மாவிற்கு மேல் சுற்றி இருக்கும் ‘எண்ணெயை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி
போட்டு இருபது நொடியில்
எண்ணெயை விட்டு பணியாரங்களை எடுக்கவும்.
சுவையான செட்டிநாட்டு ஸ்பெஷல் வெள்ளை பணியாரம் தயார்.
*குறிப்பு : அரைத்த மாவு புளிக்கக் கூடாது. இதற்கு கார சட்னி அல்லது தக்காளி வரமிளகாய் சட்ரி பொருத்தமாக இருக்கும்.
வெள்ளை நிறம் மாறாத அளவிற்கு
வெந்ததும் எடுத்துவிடவேண்டும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.
•பாரம்பரிய அரிசி தூயமல்லியில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.
. பணியாரங்களை சுட்ட பின் சற்று ஆறியதும் உட்பகுதியில் மாவில்லாமல் நன்கு வெந்துள்ளதா என உறுதி செய்துக் கொள்ளவேண்டும்.
மாவு சற்று கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
பணியாரம் எண்ணெய் குடிப்பதாக தோன்றினால் உளுந்து கூடி விட்டது அல்லது நயமான உளுந்தாக இருக்கும் இதற்கு சிறிது இட்லி மாவு அல்லது பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.