
பலாக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
• 1 சிறியது பலாக்காய்
• 1 வெங்காயம்
• 1/2 தக்காளி
• 1 பச்சை மிளகாய்
• 1/4 ஸ்பூன் சாம்பார் பொடி
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
உப்பு
• ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்
தாளிக்க
• எண்ணெய்
கடுகு
• உளுந்து
சீரகம்
கருவேப்பிலை
செய்முறை
. முதலில் துவரம்பருப்பை ஊற வைத்து. கொள்ளவேண்டும்.
இளம் சூடான நீரில் துவரம்பருப்பை ஊற வைத்தால் வேகவைக்க எளிமையாகவும் விரைவில் வெந்தும் தயாராகிவிடும்.
• வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
• பச்சைமிளகாயை இரண்டாக வகுந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• பலாக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
• பலாக்காய் நறுக்குவதற்கு முன் கை, கத்தி, நறுக்குமிடத்தையும், பலகையும் சிறிது எண்ணெய் தடவி பின் நறுக்க தொடங்க வேண்டும்.
இவ்வாறு எண்ணெய் தடவுவதால் பலாக்காயிலிருந்து வழியும் பால் நமது கைகளிலும், கத்தி அல்லது பலகையிலும் ஒட்டாமல் எளிமையாகவும் விரைவாகவும் சிறிதாக நறுக்க உதவும்.
முதலில் பலாக்காயை இரண்டாக வகுந்து அதன் பின் தோலை நீக்கி சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய பலாக்காய்களை சிறிது மோர் சேர்ந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். கருக்காமல் இருக்கும்
பின் ஊற வைத்த துவரம் பருப்பை எடுத்து முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவேண்டும். நன்கு மசிய வேகவைக்கக்கூடாது.
வேகவைத்த துவரம் பருப்புடன் நறுக்க. எடுத்து வைத்திருக்கும் பலாக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சாம்பார் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வெந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
வேறு ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை இந்த வேகவைத்தவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து ஓரிரு நிமிடம் நன்கு கலந்து கொதிக்க விடவேண்டும்.
• ஒரு கொதி வந்தபின் துருவி எடுத்து வைத்திருக்கக் கூடிய தேங்காய் துருவலையும் சிறிது நெய்யையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
•அவ்வளவுதான் சுவையான நல்ல ஒரு சத்தான செட்டிநாடு பலாக்காய் கூட்டுக்கறி தயார்.
• கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சாதத்துடன் மதிய உணவிற்கு இதை சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.