
தேவையான பொருட்கள்
1 கப் பாசிப்பயறு
1/4 கப் வரகரிசி
சிறு துண்டு இஞ்சி
1 ஸ்பூன் மிளகு
1 ஸ்பூன் சீரகம்
1 வெங்காயம்
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை
பாசிப்பயறு ஆறு மணி நேரம் ஊறவைத்து, முளைக்கட்ட வேண்டும்
தண்ணீரை வடித்து பின் ஒரு துணியில் சுற்றி வைக்க வேண்டும். நான்கைந்து மணி நேரத்தில் நன்கு முளைத்து விடும்.
• வராகரிசியினை ஒருமணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
• முளைகட்டிய பாசிப்பயறு, வரகரிசி, இஞ்சி, சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தோசைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இந்த மாவை உடனேயே தோசையாக சுடலாம்.
சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றிப் பரப்பி, அதன் மேல் ருசிக்காக சிறிதாக நறுக்கிய வெங்காயத் தூவி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சூடான இந்த வரகு பிசரட்டுடன் தக்காளி சட்னி அருமையாக இருக்கும். நார்சத்து முதல் புரதம் வரை பல சத்துக்கள் அடங்கியது.