
இனிப்பு மில்லட் குழி பணியாரம்
தேவையானபொருட்கள்
3/4 கப் கேழ்வரகு மாவு
3/4 கப் கம்பு மாவு
1/2 கப் வரகு, சாமை, தினை,
குதிரைவாலி மாவு (ஏதேனும் ஒன்று)
1 கப் தேங்காய்த்துருவல் • 1 கப் பொடித்த வெல்லம் / நாட்டுச்சர்க்கரை
1/4 ஸ்பூன் சுக்குப்பொடி
1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள்
1/4 கப் வறுத்துப் பொடித்தவேர்க்கடலை
1/2 கப் பசு நெய்
செய்முறை
கேழ்வரகு மாவு, கம்பு மாவு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி மாவு. தேங்காய்த்துருவல், சுக்குப்பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலக்கவும்.
•பின் தேவையான நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
• வறுத்துப் பொடித்த வேர்க்கடலை
சேர்க்கவும்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடாக்கி நெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து. பரிமாறவும்.
• எளிதான இந்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு விருப்பமானது. மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு எளிதில் தயாரிக்கலாம். சத்துக்கள் நிறைந்தது.