பெண்ணிடம் ரூ.20 கொடுத்து 35 சவரன் கொள்ளை!

robbery

ஆம்பூரில் வங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆம்பூர் பஜார் கனரா வங்கியில் இருந்து நிர்மலா என்ற பெண் வெளியே வந்துள்ளார். அவர் ஒரு பையில் 35 சவரன் நகையும் 45 ஆயிரம் ரொக்கமும் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.

nirmala

அப்போது அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கீழே 20 ரூபாய் பணம் கிடக்கிறது எனக் கூறி வண்டியில் மாட்டியிருந்த பையை கொள்ளையடித்து சென்றனர்.

இதனால் அதிர்ந்து நின்ற நிர்மலா பின்னர் கூச்சலிட்டுள்ளார். அதற்குள் மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :