தீக்குளிக்க முயன்ற நடிகை! மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை!

vankodumai 2 e1569148207374

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்றிரவு வடபழனி காவல் நிலையத்திற்கு வந்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினர் உடனடியாக அப்பெண்ணை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், தான் ஒரு குறும்பட நடிகை என்று அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

vankodumai 1 1

தனக்கு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பக்ரூதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக் கூறிய அப்பெண், இதனை வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பக்ரூதீன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறினார்.

மேலும் அது தொடர்பான ஆபாச படங்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். தன்னுடைய தாயாரை கொன்று விடுவதாகவும் பக்ரூதீன் மிரட்டுவதாக காவல்துறையிடம் அந்த நடிகை புகார் தெரிவித்தார்.

mayakka marunthu

இந்தப் புகாரின் பேரில் பக்ரூதீன் மீது 323- காயம் ஏற்படுத்துதல், 376- பாலியல் வன்கொடுமை, 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில், பக்ரூதீனுக்கும் நடிகைக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் ஏற்கெனவே நடிகை புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :