spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசினிமாவை மிஞ்சும் பழி வாங்கும் வெறி! கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தி கழுத்தை அறுத்த கைதி!

சினிமாவை மிஞ்சும் பழி வாங்கும் வெறி! கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தி கழுத்தை அறுத்த கைதி!

- Advertisement -
thikar

பல ஆண்டுகளாக காத்திருந்து அதற்கென்று காய் நகர்த்தி,பழிக்கு பழி தீர்த்து கொலை செய்த நபரை கண்டு தில்லி போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர்.

தில்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது ஜாகிர் இவருக்கு ஒரு தங்கை சிறுமியான அவள் மீது பாசம் மிகுந்து நேசித்து வருகிறார் ஜாகிர்.

ஜாகிரின் நண்பர் மெஹ்தாப். 27 வயதாகிறது.. ரொம்ப வருஷமாகவே இவர்கள் குடும்ப நண்பர்கள்.. அதனால் வீட்டுக்கு வந்து போக இருந்தனர். இந்நிலையில் ஒருநாள் ஜாகிரின் சகோதரியை மெஹ்தாப் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்.

இதனால் அவமானமும், மன வேதனையும் அடைந்த அந்த சிறுமி, தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த வழக்கில் மெஹ்தாப் கைதாகி ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

thikar

2014 ஆம் ஆண்டில் மெஹ்தாப் பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். குற்றத்திற்குப் பிறகு, தில்லியின் அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் மெஹ்தாப் கைது செய்யப்பட்டு 376 டி, 328, 363, 342, 120 பி ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

ஆனாலும் ஜாகிருக்கு ஆத்திரம் அடங்கவில்லை . நம்பிக்கை துரோகம் செய்து கழுத்தறுத்து, குடும்பத்தை கெடுத்த அந்த நண்பனை பழிவாங்க ஜாகீர் துடியாய் துடிக்கிறார் குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் ஒருவனை எப்படி கொல்வது?

குற்றவாளி இருப்பது திகார் ஜெயிலில். அதனால் அந்த ஜெயிலுக்கு செல்ல வேண்டுமானால் தான் இன்னொரு கொலையை செய்தால்தான் முடியும் அதனால் பழி வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் மற்றொரு கொலையை செய்ய தூண்டியது.

யாரோ ஒருவரை தேவையில்லாமல் கொன்றுவிட்டு, திகாருக்குள் நுழைகிறார் ஜாகிர். ஆனால், அங்கும் மெஹ்தாபிடம் நெருங்க முடியவில்லை மெஹ்தாப் இருக்கும் இடத்தில் இருந்து தள்ளி ஜாகீர் சிறை அறை இருந்தது.

அதனால் குற்றவாளியை நெருங்கி செல்ல என்ன வழி என்று யோசிக்கிறார்.. பிறகு தன்னுடன் இருந்த தன்னுடைய சிறைவாசிகளிடம் தொடர்ந்து சண்டை போட ஆரம்பிக்கிறார் ஜாகிர்.

பொறுத்து பொறுத்து போன சிறைவாசிகள், வார்டனுக்கு புகார் சொல்கிறார்கள். உடனே சிறை அதிகாரிகள், வேறு இடத்தில் அடைக்கிறார்கள். அந்த இடமும் மெஹ்தாப் சிறை அருகில் இல்லை என்பதால், திரும்பவும் வம்பிழுத்து, மெஹ்மாப் அறை அருகில் செல்லும்வரை போராடுகிறார்.. இறுதியாக, அந்த வாய்ப்பு ஜாகிருக்கு கிடைக்கிறது.

மெஹ்தாப்பை கொலை செய்ய நேரம் பார்த்து கொண்டே இருந்த ஜாகீர் ஜூன் 29 அன்று மெஹ்தாபை ஜெயிலிலேயே வைத்து படுகொலை செய்தார். இந்த கொலையை செய்து முடிக்க ஜாகிருக்கு 6 வருடங்கள் பிடித்தது. இதற்காகவே கத்தி போன்ற உலோக துண்டை ரெடி செய்து கையிலேயே வைத்திருந்தார் ஜாகீர். ஆத்திரம் தீர குத்தி குத்தியே மெஹ்தாபை கொன்று முடித்தார்.

“ஜூன் 29 அன்று, காலை பிரார்த்தனை நேரத்தில், மற்ற கைதிகள் பிரார்த்தனைக்காக வெளியே வந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஜாஹீர் மாடிக்குச் சென்று, மெஹ்தாப்பைக் கண்டதும் கத்தி போன்ற பொருளால் அவரைத் தாக்கியுள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.

சினிமாவை மிஞ்சும் இந்த பழிவாங்கிய படலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு போயுள்ளனர்

1 COMMENT

  1. You’re so awesome! I do not think I have read through anything like that before.
    So wonderful to discover somebody with some genuine thoughts on this subject.
    Seriously.. many thanks for starting this up. This site is one thing that’s needed on the internet, someone with some originality!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe