ஏப்ரல் 21, 2021, 9:47 காலை புதன்கிழமை
More

  12 வயது சிறுவர்கள் ஒரு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! மூச்சு திணறி இறந்த குழந்தை!

  vankodumai

  செல்போனால் வீணாகிப்போன சிறுவர்கள் இரண்டு பேர் ஒரு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  முதிர்ச்சி இல்லாதவர்கள் கையில் கிடைத்த தொழில்நுட்பம் பெரும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

  உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை தனது நான்கு வயது சகோதரியோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் இரண்டு பேர் ஒரு வயது பெண் குழந்தையை அருகே தனிமையான இடத்திற்கு தூக்கி சென்றனர்.

  இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த குழந்தை மூச்சு திணறி இறந்தது. இதனால் பயந்து போன சிறுவர்கள், குழந்தையை அருகேயுள்ள ஒரு தொட்டியில் போட்டு விட்டு ஊருக்குள் சென்றனர்.

  அங்கு, குழந்தை கொய்யாப்பழம் சாப்பிடும்போது மூச்சு திணறி இறந்துவிட்டாள் என்று பொய் சொல்லியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் மூச்சு திணறி இறந்த விஷயம் தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து கூர்நோக்கு இலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »