ஏப்ரல் 14, 2021, 7:09 மணி புதன்கிழமை
More

  இரவில் தனியே வந்த பெண்.. அட்ரஸ் கேட்பதுபோல் ஆளை காரில் கடத்திய கும்பல்! காட்டுக்குள் 5 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

  vankodumai

  இரவு கடைக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து, துப்பாக்கி முனையில் ஐந்து பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரின் சைபாவ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு 27 வயது பெண் கடைக்கு போய் விட்டு தனியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த ஐந்து பேர் குடிபோதையில் இருந்தனர்

  பெண்ணின் வழியை மறித்து காரை நிறுத்தினார்கள் ஒருவர் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணிடம் விலாசம் கேட்டார். அந்த பெண் நின்று விலாசத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மற்ற நால்வரும் காரிலிருந்து இறங்கி அந்த பெண்ணை தூக்கிக் காரில் போட்டுக் கொண்டு போனார்கள்.

  பிறகு அந்த காரை ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்தினார்கள் .அப்போது அந்த பெண் சத்தம் போட்டு கத்தினார் ,உடனே அவர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் முகத்துக்கு நேரே காமித்து சத்தம் போட்டால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினான் .

  உயிருக்கு பயந்த அந்த பெண் சத்தம் போடாமலிருந்தார் .அப்போது அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்து விட்டு, அந்த பெண்ணை அந்த காட்டிலேயே தனியே விட்டு விட்டு சென்று விட்டார்கள் .

  அந்த பெண் மெல்ல நடந்து சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகாரளித்தார் ,அந்த பெண்ணின் புகாரை பெற்ற போலீசார் அந்த பாலியல் குற்றாவாளிகளை தேடி வருகிறார்கள்

  இது போன்ற சம்பவம் அப்பகுதியில் அதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது. அதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னாள் இதே போல் ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளதால் பெண்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »