ஏப்ரல் 21, 2021, 7:02 மணி புதன்கிழமை
More

  இன்றைய ‘கிரைம் ரவுண்ட் அப்..’ மதுரையில்!

  தாய்ப்பால் கொடுத்த போது திடீரென்று பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை பரிதாப சாவு போலீஸ் விசாரணை!

  crime-scene
  crime-scene

  மதுரையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது

  மதுரை : சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

  மதுரை தத்தநேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சிவா 26. இவர் சிறுமியுடன் பழகியதை தெரிந்து அவரது பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் சிவா 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று சமயநல்லூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து பின்னர் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது .இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சிவாவை கைது செய்தனர்.

  செல்போன் லேப்டாப் வாங்கி தர மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

  மதுரை: செல்போன் லேப்டாப் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை கரிமேடு நடராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (21). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது கஞ்சா பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் தனது சகோதரியிடம் செல்போன் லேப்டாப் வாங்கி தரும்படி கேட்டுள்ளார் .அதற்கு அவர் மறுக்கவே மனமுடைந்த சுந்தரபாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தாய்ப்பால் கொடுத்த போது திடீரென்று பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை பரிதாப சாவு போலீஸ் விசாரணை!

  மதுரை டிச.5.மதுரையில் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது உடல் நிலை பாதிக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

  மதுரை ஐயர் பங்களா ஸ்ரீ நகரை சேர்ந்தவர் பாபு .இவரது மகள் ஷிவானி பிறந்து ஆறு மாதம் ஆன சிவானிக்கு அவரது தாயார் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 6 மாத குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குடிக்கு அடிமையானவர் வயிற்று வலியால் தூக்கு போட்டு தற்கொலை

  மதுரை: குடிக்கு அடிமையானவர் வயிற்று வலியால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை தத்தனேரி கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்தவர் தர்மர் 50. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது கஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் தொடர்பாகசெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மதுரையில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் விஷம்தின்று தற்கொலை

  மதுரை: குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் விஷம்தின்றுதற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை தத்தனேரி கீழ வைத்தியநாத புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

  அவரை மனைவி கண்டித்தார் .இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்துசெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மதுரையில் குடி பழக்கத்தை அம்மா கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை!

  மதுரை.டிச.5. குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  மதுரை எஸ். ஆலங்குளம் பாலமுருகன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பாண்டி மணி 22 .இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வந்த நிலையில் அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாண்டி மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மதுரையில் கிடைத்த வேலை பிடிக்காததால் பீல்டு ஆபீசர் தூக்குப்போட்டு தற்கொலை

  மதுரை: கிடைத்த வேலை பிடிக்காமல் மனமுடைந்த பீல்டு ஆபீசர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடி ஊரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராம்குமார் 20. இவர் மதுரையில் பீல்டு ஆபீஸராக வேலை பார்த்து வந்தார். உத்தங்குடியில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தார் .இந்த வேலை அவருக்குப் பிடிக்காமல் வேலையை விட்டு ஊருக்கு சென்றுவிட்டார் . இதை அவர் தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராம்குமார் மன அழுத்தம் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்துகே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  மதுரை ரிங் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி!

  மதுரை: மதுரை ரிங் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார்.

  மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் குணசேகரன் 38 .இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோடு மண்டேலா நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குணசேகரனுக்கு பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »