ராமேஸ்வரம் – கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை ..

Published:

ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவ பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் பாலியல் சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி யடைய செய்துள்ளது.

images 4 3 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img