
சிவகாசி அருகே ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து இவரது மகன் முத்துக்குமார் அந்த பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனைக் காணவில்லை என்றும் யாரோ கடத்திச் சென்றுள்ளார்கள் என்று சிவகாசி நகர் காவல் நிலையத்தில் முத்துக்குமாரின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்தனர் இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனைகூட்டம் காட்டுப் பகுதியில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து போனவர் முத்துக்குமார் என்பதை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் வெட்டபட்ட நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்த முத்துக்குமாரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரை கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.