ராஜபாளையம் அருகே பி பி சி பைப் கம்பெனியில் வட மாநில வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கலிங்கபுரம் பகுதியில் சன் பிவிசி பைப் தயாரிக்கும் கம்பெனி உள்ளது இதில் 15 மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பீகார் மாநிலம் நவதா மாவட்டம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் விஜய் ஆகியோர் இந்த கம்பெனியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர் ஞாயிற்றுக்கிழமை இருவரும் மது அருந்தி உள்ளனர் இந்த நிலையில் இன்று பார்த்த பொழுது ரஞ்சித் கழுத்து எடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்ட காவலாளி சன் டைப் கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .
அவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து தொடர்ந்து ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி. ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் முதற்கட்டு விசாரணையில் ரஞ்சித் மற்றும் விஜய் விஜயின் தம்பி ஆகியோர் மது அருந்தியதாகவும் வாக்குவாதம் ஏற்பட்ட உள்ளது ரஞ்சித்தை விஜய்யும் அவர் தம்பியும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட வசதி தெரிய வந்துள்ளது