அருப்புக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் இறந்து விட்டதாக போலீஸ் கூறியதால் தன் கணவரை அடித்துக் கொன்று விட்டதாக மனைவி புகார்செய்தார்.அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்து இரண்டு இடங்களில் சாலைமறியல் நிகழ்ந்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை எம் டி ஆர் நகரில் நேற்று ஒரு வீட்டில் வாலிபர் உள்ளே புகுந்ததாக கூறி அப்பகுதி மக்கள் ஒருவர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .காவல்துறையினர் விசாரணையில் செம்பட்டியைச் சேர்ந்த தங்கமாரி என்பவருடைய மகன் தங்கப்பாண்டி எனவும் அவர் மனநிலை சரியில்லாததால் அப்படி நடந்து கொண்டார் எனவும் தெரியவர அவர் விடுக்கப்பட்டார் அதன் பின் எம்.டி.ஆர் நகர் பகுதி மக்கள் விசாரணைக்கு கூட்டிச் சென்றவரை ஏன் விடுவித்தீர்கள் என காவல்துறையினரிடம்கோரிக்கைவைத்தனர்.
அதன் பின் மீண்டும் தங்கபாண்டியை டவுன்போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர் .ஆனால் இன்று காலை மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என கூறி அவரை அனுமதித்ததாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாகவும் தங்கபாண்டியன் மனைவி கோகிலாதேவிக்கு தகவல் கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் மருத்துவமனை வந்த தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலா தேவிதனது கணவர் காவல் துறையால் அடித்துக் கொல்லப்பட்டார் என கூறி உறவினர்களுடன் சேர்ந்து உடலை வாங்க மறுத்து அரசுமருத்துவமனையை முற்றுகை இட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தங்கபாண்டியன் மனைவி கோகிலாதேவிகூறுகையில் எங்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன எனது மாமனார் தங்கமாரியுடன் சேர்ந்து சாயப்பட்டறையில் எனது கணவர் வேலை பார்த்து வருகிறார் .நேற்று எனது கணவர் எம் டி ஆர் நகரில் ஒரு வீட்டில் உள்ளே புகுந்தார் என கூறிஅவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் அதன் பின் எனது கணவர் தங்கப்பாண்டிக்கு மனநிலை சரியில்லை எனக் கூறி இராமனுஜபுரத்தில்உள்ள அன்னை மனநல காப்பகம் இல்லத்தில் சேர்த்ததாகவும் அதன் பின் மீண்டும் மாலை எனது கணவரை அங்கிருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் கூறினார் .
இதனிடையே நேற்று காலை கணவருக்குஉடல்நிலை சரியில்லை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என போலீசார் கூறினர் .அங்கு வந்து பார்க்கையில் மருத்துவர் ஏற்கனவே உங்கள் கணவர் இறந்துவிட்டார் என கூறிவிட்டார் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் எனது கணவரை அடித்து கொன்று விட்டனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
அதன்பின் தங்கபாண்டியன்உடலைவாங்கமறுத்துஅவரதுமரணத்திற்குகாரணமாக இருந்தவர்ள்மீது நடவடிக்கை எடுக்க கோரி அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் அதேபோல் ஆத்திபட்டி பகுதியிலும் தங்கபாண்டியனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த மதுரை சரக டி ஐ ஜி பொன்னி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .
மேலும் வருவாய் கோட்டாட்சியர் கல்யாண் குமார் வருவாய் வட்டாட்சியர் அறிவழகன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.