ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சனையில் பெரியப்பாவை கத்தியால் குத்திய நபர்.சித்தப்பா மகனே சினிமா பாணியில் லாரி ஏற்றி கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தில்
தேவசகாயம் என்ற காசிராஜன்அவரது தம்பி பிரதீவ்ராஜ் இருவருக்கும் சொந்தமாக வீடு மற்றும் விவசாய நிலம் உள்ளது. இதுபோக தேவ சகாயம் தனியாக இடம் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த விவசாய இடத்தில் தனியாக போர் போட்டுள்ளார். அதிலிருந்து தண்ணீர் தனக்கு வழங்க வேண்டும் என கூறி தம்பி மகன் ப்ரீத்திவ்ராஜ், பெரியப்பாவாண
தேவசகாயம் என்ற காசிராஜனிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோழி கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவ சகாயம் என்ற காசிராஜன் அவர்களுடைய தம்பி மகன் ப்ரீதிவ்ராஜ் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தொடையில் குத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த தேவசகாயத்தின் மகன் சிவரங்கராஜ் தனது சொந்தமான லாரி எடுத்து வந்து ப்ரித்திவ்விராஜ் மீது எற்றியதில் வீடு சேதம் அடைந்து ப்ரித்திவ்ராஜ் பலத்த காயம் அடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவசகாயம் என்ற காசிராஜனும் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஏற்றி கொலை செய்ப முயற்சியில் ஈடுபட்ட சிவரங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா பாணியில் லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி ஈடுபட்டது அந்த கிராமத்தில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.