

அருப்புக்கோட்டையில் நகைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவியை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் இவருடைய மனைவி ஜோதிமணி ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான சங்கரபாண்டியன் – ஜோதிமணியின் மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வந்தார் தம்பதிர்கள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர் இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை பணத்தை திருடிச் சென்றனர்.
ஞஇதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, சிவகாசி டிஎஸ்பி தலைமையில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில், சந்தேகப்படும்படியான வகையில் அங்கு சென்ற ஜோதிபுரம் 7வது தெருவில் வசிக்கும் சங்கர்(42) என்பவர் அடிக்கடி சைக்கிளில் சென்றது தெரிய வந்தது. எனவே, சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சங்கர் தனது மனைவி பொன்மணியுடன் கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முனபு குடியேறி, சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியருடன் நன்கு பழகி வந்துள்ளார்.
பின்னர், சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். பின்பு, சங்கர பாண்டியன் சத்தம் கேட்டு வந்த ஜோதிமணியையும் கொலை செய்ள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி பொன்மணி உதவியுடன் அங்கிருந்து தப்பியுள்ளார் என தெரிய வந்தது. இதனையடுத்து சங்கரையும் பொன்மணியும் போலீசார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.