ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 22 வயது தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி மலை அடிவாரப் பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவல் தொடர்ந்து ராஜபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு பிறகு சென்று உடலை கைப்பற்றினார் .
22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் கிடப்பதை பார்த்த போலீசார் உடனடியாக உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த டேனியல் பொன்னுத்துரை மகன் இமானுவேல் சேகரன் என்பதும் இவர் அப்பகுதியில் பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது மேலும் தொலை செய்யப்பட்ட வாலிபர் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அவ்வப்போது அடி வாங்குவதும் வழக்கமாக இருந்துள்ளது.
தற்போது கொலை செய்யப்பட்ட மானுவேல் சேகரன் வெட்டி கொலை செய்யப்பட்டது திருட்டு வழக்கில் அல்லது பெண்களிடம் கிண்டல் கேலி செய்ததால் கொலை நடந்ததா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்