அருப்புக்கோட்டை அருகே தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் டாலர் மாற்ற வந்ததாககூறி ரூ84 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் என்பவர் மனைவி வனிதா(35).
இவர் பாளையம்பட்டி தபால் நிலையத்தில் சப் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் நிலையில் கலந்த 17ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் முக கவசம் அணிந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வனிதாவிடம் டாலர் பரிமாற்றம் செய்ய வேண்டும் என ஆங்கிலத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த ஆண் நபர் தடுப்பு கதவை திறந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் .
அப்போது வனிதாவும் தபால் நிலைய ஊழியர் கோபாலகிருஷ்ணனும் சத்தம் போட்டு அவர்களை வெளியே அனுப்பி உள்ளனர் அப்போது திடீரென சந்தேகம் அடைந்த வனிதா மேஜையை திறந்து பணத்தை சரிபார்த்த போது அதிலிருந்த பணம் ரூபாய் 84,000 மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அவர்களின் விசாரணைக்கு பின் நேற்று(18.11.22) பணத்தை கண்டுபிடித்து தருமாறு வனிதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது