இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை மூன்று வழக்குகளில் வாலிபருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை ஐந்து ஆயிரம் அபராதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது வத்திராயிருப்பு
அந்த பகுதியை சேர்ந்தவர் மாடசாமி 36 இவர் 15 வயது இளஞ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது தொடர்பாக 2017 மற்றும் 18 ஆகிய ஆண்டுகளில் இவர் மீது வத்திராயிருப்பு காவல் நிலையங்களில் இரண்டு போக்சோ வழக்குகளும்
திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் ஆக மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன இந்த மூன்று வழக்குகளும் திருவலிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் இளஞ்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாடசாமிக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடாக வழங்க பரிந்துரை செய்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.