To Read it in other Indian languages…

Home கிரைம் நியூஸ் சிவகாசி கோவில் ராஜகோபுர தீ விபத்து இருவர் கைது..

சிவகாசி கோவில் ராஜகோபுர தீ விபத்து இருவர் கைது..

IMG 20221120 WA0061 1 - Dhinasari Tamil

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான இருவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலணியிலுள்ள மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தற்பொழுது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ( 20-11-2022 ) தேதியன்று மாலை கோவில் வழியாக திருமண சுப நிகழ்ச்சிக்காக சிறு வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது பட்டாசு வெடித்துள்ளனர் அப்பொழுது ஏற்பட்ட தீப்பொறி சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தின் மீது பயங்கர தீ விபத்து…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலணியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தற்பொழுது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சிறு வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது வாண வெடி பட்டாசு வெடித்துள்ளனர் அப்பொழுது ஏற்பட்ட தீப்பொறி கோவிலின் இராஜகோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து உள்ளது இதில் ஏற்பட்ட தீ பொறி காரணமாக தீ மல மல என பிடித்து எறிய தொடங்கியது உடனடியாக இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ மேலும் இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுரத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து உள்ளது இதில் ஏற்பட்ட தீ பொறி காரணமாக தீ மல மல என பிடித்து எறிய தொடங்கியது உடனடியாக இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து எளிதில் தீ பற்ற கூடிய வாண வெடி பட்டாசை போட்டதற்க்காக
பாரசக்தி காலனியை சேர்ந்த பாலமுருகன் / சதீஸ்குமார் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் சிவகாசி நகர் காவல் துறையினர் மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.