சாத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை குத்தி கொன்ற தம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்த அண்ணன் தம்பியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டி வைரவ சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பொன்ராஜ் (58). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அதே தெருவில் மிக்சி கிரைண்டர் ஃபேன் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி மொட்டையா சாமி (55) இவரும் அதே தெருவில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்.
கூலி வேலை செய்து வரும் மொட்டையா சாமி குடித்துவிட்டு சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிய வருகிறது. நேற்று இரவும் வழக்கம் போல குடித்துவிட்டு பொன்ராஜிடம் தகராறு செய்துள்ளார் இந்த நிலையில் இன்று அதிகாலையில் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்த பொன்ராஜை கடைக்கு வந்த மொட்டையாசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த மொட்டையாசாமி பதற்றமில்லாமல் வீட்டிற்கு சென்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார்வீட்டில் இருந்த மொட்டையசாமியை கைது செய்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட பொன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை சம்பவம் நடந்த இடத்தில் சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார். அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட கொலை சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.