சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கொலை செய்த கணவரை போலீசார் கைதுசெய்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா எட்டாக்காபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். அதே பட்டாசு ஆலையில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் சாத்தூர் படந்தாலை சேர்ந்த கருப்பசாமியுடன் ரூபாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்து வரும் பாண்டிசெல்வத்தில் அம்மாவை பாதயாத்திரை அனுப்பி வைப்பதற்காக நேற்று மாலை சென்றுவிட்ட நிலையில் அவர் வீட்டில் இல்லாத நேரத்தை தங்களுக்கு சதாகமாக பயன்படுத்தி கொண்டு வீட்டிற்கு வந்த கருப்பசாமி ரூபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென வீட்டிற்கு வந்த பாண்டிசெல்வம் மனைவி ரூபா கருப்பசாமியுடன் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் கருப்பசாமியை கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் கொலை செய்த பாண்டி செல்வதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவர் கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.