― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை! அடுத்த...

ஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை! அடுத்த வருடம்..?!

- Advertisement -
modi independence3

ஆகஸ்ட் 5ஆம் தேதி தற்போதைய பாஜகவின் அரசியல் முன்னேற்ற பதிவேட்டில் முக்கியமான நாளாக இடம்பெற்றிருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்ககால அரசியல் அமைப்பான ஜனசங்கம் காலத்திலிருந்து,அமைப்பின் கொள்கைகளாக மூன்று விஷயங்களை கொண்டிருந் தார்கள். காஷ்மீரை மீட்டெடுக்க ஜனசங்க நிறுவனர்களில் ஒருவரான ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி காஷ்மீரில் மர்மமான முறையில் உயிரிழந்த நாளிலிருந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை முக்கியமான கொள்கையாக கையில் வைத்திருந்தது பாஜக.,

அடுத்து தேசத்தின் அடையாளமான நாயகன் ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு அதன்மீது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர் களால், பாபர்  பெயரில் அமைக்கப்பட்ட மசூதியை அகற்றி ராமர் கோயிலை மீட்டெடுப்பது என்பதைக் கொள்கையாக வைத்துக் கொண்டிருந்தது. 

அடுத்து நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை தனது மூன்றாவது கொள்கையாக வைத்திருக்கிறது. இம்மூன்றை வலியுறுத்தியே கடந்த காலங்களில் பாஜக தேர்தல்களில் பங்கேற்று இருக்கிறது. 

modi old photo2

தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இந்த மூன்றில் முதல் இரண்டு முக்கிய கொள்கைகள் மோடி தலைமையிலான பாஜகவின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் படிப்படியாக, அதுவும்  அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது! 

மூன்றாவது கொள்கையான பொது சிவில் சட்டம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!

கடந்த காலங்களில் இதை பார்க்கும் பொழுது ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவே அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள் மூன்றாவது உறுதியான பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று பாஜகவினர் நம்புகின்றனர் 

கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீர் லடாக் என்று இருந்த  3 பிராந்தியங்களை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது அரசு.

இதை அடுத்து, லடாக் மக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாக நம்பிக்கையுடன் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடினர். இவ்வாறு பிரிக்கப்பட்ட 100 நாட்களுக்குள் 50 அதிரடி முன்னேற்ற நடவடிக்கைகள் காஷ்மீர் பிராந்தியத்தில் நடைபெற்றன. தற்போது லடாக்கில் முதல் மத்திய பல்கலைக்கழகம் அமைய உள்ளது.

தற்போது வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளது இதில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வார் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளார் அதுபோல் ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்தி நாட்டின் ஏராளமான ஹிந்துக்கள் இதயத்தில் இடம்பிடித்த லால் கிருஷ்ண அத்வானி இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது .

தற்போது நாட்டில் மத ரீதியான சிறுபான்மை பெரும்பான்மை என்ற பிரிவுகளை வைத்துக் கொண்டு பல்வேறு தேச விரோத நடவடிக்கைகளில் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்த அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன

இந்த நிலையில் இவற்றை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் சுதந்திர நாட்டில் சமமானவர்கள் ஜாதி மத ரீதியாக அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பு சமமான சட்டமும் ஒரே அரசியல் நெறிமுறைகளும் இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக கொண்டுள்ள பொது சிவில் சட்டம் என்ற கொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version