மீண்டும் மகிந்த ராஜபட்ச… இலங்கை அரசியல் அதிரடிகள்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

இருப்பினும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுபவராக இருந்தால் அவரை அந்தப் பதவியிலிருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து, அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சதுரங்கத்தில் காய்களை நகர்த்தல் போல் வெகு காலமாக இருந்து காய்களை நகர்த்தி மீண்டும் மகிந்த ராஜபட்ச பதவிக்கு வந்துள்ளார்.

The man who ate the hoppers returns the hoppers with gratitude… 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஏற்ப பிரதமர் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒன்று பதவி விலகுவதன் மூலம், அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் … இல்லையென்றால்  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்குதல்… இப்படித்தான் வழிவகை உண்டு.

இருப்பினும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுபவராக இருந்தால் அவரை அந்தப் பதவியிலிருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து, அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடாக இது இருக்கிறது. எவ்வாறாயினும் நாடாளுமன்ற நடைமுறையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு ஏற்ப பிரதமர் ஒருவரை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்க முடியும்.

ஆனால் ஜனாதிபதி தன்னிச்சையாக, தனது எண்ணத்திற்கு ஏற்ப  பிரதமரை பதவி நீக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திடம் கேட்டு பெரும்பான்மை உள்ளவர்கள், எவர் பெயர் குறிப்பிடுகின்றார்களோ அவரை நியமிக்க முடியும்.

அதே நேரம் நிபுணர்கள் கூற்றுப் படி, தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. தேசிய அரசாங்கம் தொடர்பான முக்கிய கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டது. இதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது தேசிய அரசாங்கமோ இன்றி அமைச்சரவை அல்லது பிரதமருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு அவைஇ இருக்கவும் முடியாது. அவை சட்டத்திற்கு புறம்பானதே!

தேசிய அரசாங்கம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படவும் இல்லை , புதிய ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவும் இல்லை. இதனால் அமைச்சரவை கலைக்கப் பட வேண்டும் என்பதுடன் பிரதமருக்கும் பதவியில் இருப்பதற்கான அதிகாரமும் இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோரால் எடுக்கும் தீர்மானங்கள் செல்லுபடி ஆகாது என்று கூறியுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை மூத்த விரிவுரையாளர் மேனக ஹரன்கஹ இது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,  19 ஆவது திருத்தத்தின் ஊடாக இதற்கு முன்னர் இருந்ததையும் பார்க்க பிரதமருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பிரதமரை தேர்வு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும், பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கென தனியான அதிகாரங்கள் கிடையாது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் பிரதமரை எழுத்து மூலம் அறிவித்து ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியும். ஆனால் 19ஆவது திருத்தத்தின்படி, ஜனாதிபதியின் எண்ணப்படி பிரதமரை நீக்க முடியாது. பிரதமர் விரும்பி பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர் பதவியில் தொடரும் வேளையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இவ்வாறான பிரதமர் தலைமை வகிக்கும் அரசாங்கம் எந்நேரமும் வீழக் கூடிய சாத்தியங்கள் இருக்குமானால், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி பிரதமரை பதவி விலக செய்வதற்குத் தேவையான நிலையை ஏற்படுத்தலாம். இவை தவிர அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியாது.

இருப்பினும் அரசியல் அமைப்பின் 42.3, 42.4 மிக முக்கியமான பிரிவுகள் பிரதமரது நியமனம் தொடர்பாக சான்று தருகின்றன. ஜனாதிபதிக்கு பிரதமரது நியமனம் தொடர்பாக அதிகளவு அதிகாரம் உண்டு!

இப்படி இலங்கையில் அரசியல் சட்ட நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...