அரபு நாடுகளே புறக்கணித்த நிலை! தனிமைப் படுத்தப்பட்ட பாகிஸ்தான்..!

1969-ல் 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாக உருவானது Organization of the Islamic conference.

ஐ.நா.வுக்கு அடுத்தபடி அதிக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு இதுதான். அபுதாபியில் நடைபெறும் இந்த அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று உரை நிகழ்த்திய அவர், “இந்தியா அந்த மதத்தையும் எதிர்க்கவில்லை; பயங்கரவாதத்தை எதிர்க்கிறது” என்றார்.

சுஷ்மா பங்கேற்றால் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாக் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மிரட்டிப் பார்த்தார். ஆனால், பாக் மிரட்டலை OIC புறக்கணித்தது.

பாகிஸ்தான் இல்லாவிட்டலும் இந்தியாதான் எங்களுக்குத் தேவை என்று நினைத்தது. கடைசியில் இந்தியா பங்கேற்றது; பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.

இதன் மூலம் பாகிஸ்தான் எந்த அளவுக்கு இஸ்லாமிய நாடுகளாலேயே புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதே போன்ற காட்சி 1969லும் நடந்தது. அப்போது நடந்த முதல் மாநாட்டுக்கு அன்றைய இந்திய தொழில்துறை அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமதுக்கு OIC அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு பாக். கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஃபக்ருதீனுக்கு விடுத்த அழைப்பை OIC திரும்பப் பெற்றது.

இப்போது – 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மாதிரியான ஒரு காட்சி. ஒரேயொரு மாற்றம்.

அன்று இந்தியாவை நிராகரித்த OIC, இன்று பாகிஸ்தானை நிராகரித்துள்ளது. இதுதான் காங்கிரஸ் நிர்வாகத்துக்கும் மோடி நிர்வாகத்துக்கும் இடையிலான வித்தியாசம்.

– கோலாகல ஸ்ரீநிவாஸ்.

 Ms Swaraj was the first Indian minister to address the meeting of the 57 Islamic countries. India’s participation came despite strong demand by Pakistan to rescind the invitation to Ms Swaraj to address the grouping which was turned down by the host UAE, resulting in Pakistan’s Foreign Minister Shah Mehmood Qureshi boycotting the plenary. 
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...