வாக்குகளுக்காக வாக்குறுதிகள்! தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக.,வின் ‘பம்மாத்து’ வேலை!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நிறைவேற்ற இயலாத அம்சங்கள் ஒப்புக்கு அளித்த அளிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இவையெல்லாம் நடக்குமா நடக்காதா என்ற சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற அளவில் ஏதோ மனம் போன போக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு அம்சமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர் பலர்.

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது தற்போதைய சூழ்நிலையில் மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது என்றும் இனிமேல் அதை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்!

மேலும் மத்திய அரசு பட்டியலில் உள்ள கல்வி மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்படும் என்று திமுக கூறியுள்ளது. இதில் பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் விஷயம் தான் !ஆனால் இதனை மத்திய அரசு ஏற்பதற்கான சூழல் இல்லை என்பதே உண்மை. காரணம் கல்வி விவகாரத்தில் மாநில அரசிடம் அதிகாரத்தை அளித்தால் சர்ச்சைக்குரிய பல்வேறு கொள்கைகளை அவரவர் நோக்கம் போல் புகுத்தி விடும் என்று மத்திய அரசு நினைக்கிறது! எனவே தனது அதிகாரத்தை இழப்பதற்கு மத்திய அரசு விரும்பாது என்பதுதான் உண்மை!

அடுத்த அம்சமாக நீட் தேர்வு குறித்து திமுக கூறியுள்ள வாக்குறுதி உச்ச நீதிமன்றம் வரை சென்று நிறைவேற்ற முடியாத ஒன்றுதான் நீட் தேர்வு ரத்து என்பது! அதை மீண்டும் வலியுறுத்தி மக்களை குழப்பி வேண்டுமென்றே பொய்யான வாக்குறுதி அளிப்பதாகவே இந்த அம்சம் கருதப்படுகிறது!  தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை!

அடுத்து சேது சமுத்திர திட்ட பணிகள் மீண்டும் துவக்கப்படும் என்று திமுக கூறியுள்ளது! இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன! அப்போது சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்த டி ஆர் பாலு தனது பினாமி நிறுவனம் மூலம் சேது சமுத்திர திட்டத்தில் மணல் அள்ளி வெளியே போடுவதற்கும் குழி தோண்டுவதற்கும் இயந்திரங்கள் மூலம் கோடிக் கணக்கில் முறைகேடு செய்தார் என்று குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தன! நீர் வழித் தடத்தில் அடியில் இருக்கும் மணலை அள்ளி அருகிலேயே கொட்டி விட்டு மீண்டும் நீர் வழித் தடத்தில் அதே மணல் அள்ளப்பட்ட இடத்திலேயே நிரம்பி… இது ஒரு சுற்றுப் பணி போல் தொடர்ந்து கொண்டிருந்தது! எந்தப் பணியும் நிறைவேறாத நிலையில் நிதி மட்டும் பெருமளவில் கையாடல் செய்யப்பட்டது! சேது சமுத்திரத் திட்டம் செயல்படும் விதம் குறித்து வெளி உலகுக்கு எந்த தகவலும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்! இத்தகைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது! அந்த வழக்கு காரணமாக சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது! எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டத்தால் பெரிய அளவில் பலன் இல்லை என்று அனைவரும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், மீண்டும் அதே போல் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே திமுக இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது என்று அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டுகிறார்கள்!

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து திமுக கூறியுள்ள அம்சம் உடனே நிறைவேறக் கூடியது இல்லை என்றாலும், இது வரவேற்கக் கூடிய ஒன்றுதான்! இதற்கு தேவை மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான இணக்கமான சூழலும்தான்! இதனை நிறைவேற்ற மத்தியில் தற்போது உள்ள பாஜக அரசு பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளது! கங்கையை தூய்மைப்படுத்தியது போன்று நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதற்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி இதை மோடி அரசு செயல்படுத்தும் என்கிறார்கள்.  இதை திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது,

அடுத்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் பயண சலுகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது! ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கான பயண கட்டண சலுகை செலவு குறைப்பு கருதி ரயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டது! இந்நிலையில் இலவச பயணத்துக்கு ரயில்வே நிர்வாகம் சம்மதம் தெரிவிக்குமா என்பது கேள்விக்குறி தான்! இது மாநில கட்சியின் கையில் இல்லை!

அடுத்து விவசாயிகள் கடன்கள் மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கான வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் பங்கேற்றால் மட்டுமே இவற்றில் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்! மற்றபடி பெரும்பாலான வாக்குறுதிகள் வெறும் காற்றில் பறக்கும் காகிதத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் தான்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...