பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 16 வரை ஆன் லைனில் பதிவு செய்யலாம் என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்…
விளையாட்டுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும்
மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன் லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர்
சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன
2020-21 ஆம் கல்வியாண்டில் 465 கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்
வகுப்புகள் தொடங்குவது குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை
www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்