தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழு அமைக்க சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் நிகழாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் ‘அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.