மதுரை காமராசர் பல்கலைக்கழக டி மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி மற்றும் பால் பேட்மிட்டன் போட்டிகள் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் விருதுநகர், சிவகாசி, திருமங்கலம், சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் காரியாபட்டி பகுதிகளைச் சார்ந்த கல்லூரிகள் பங்கேற்றன. கல்லூரிகளுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் இறுதிப் போட்டியில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் விளையாடியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வெற்றி பெற்றது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக டி மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் முதலிடத்தை விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியும், இரண்டாம் இடத்தை ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், மூன்றாம் இடத்தை சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் பெற்றது.
பரிசளிப்பு விழாவில் உடற்கல்வித்துறை இயக்குனர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் சுயநிதியை பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமராஜ் வாழ்த்துரை வழங்கி கோப்பை மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்தனர். உடற்கல்வி பேராசிரியர் அபிநயா நன்றி உரை கூறினார்.