கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டங்களில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடைபெறவுள்ளது என்று, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட வட்டங்களில் நடைபெறவுள்ளது.
அதன்படி, 10.10.2024 அன்று காளையார்கோவில் வட்டத்திற்கு செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியிலும், 15.10.2024 அன்று இளையான்குடி வட்டத்திற்கு டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியிலும், 17.10.2024 அன்று திருப்புவனம் வட்டத்திற்கு கே.எல்.என் பொறியியல் கல்லூரியிலும், 22.10.2024 அன்று காரைக்குடி மற்றும் சாக்கோட்டை வட்டத்திற்கு காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியிலும், 24.10.2024 அன்று தேவகோட்டை வட்டத்திற்கு ஆனந்தா கல்லூரியிலும், 29.10.2024 அன்று திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டத்திற்கு திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகளும் வழங்கப்படும்.
அதுமட்டுமன்றி, புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேவைப்படும் ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஏதுவாக வங்கிகளில் இருந்து புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவ /மாணவியர்கள் விண்ணப்ப நகல், மாணவ/ மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account பாஸ்புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.