சென்னை: வெள்ளிக்கிழமை இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்க்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வானொலி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் வரலாறு படைக்கும் விதத்தில் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் வகையில் தேர்வுகள் அமைய வேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் வெற்றி வாகை சூட வேண்டும் என்றும் அதற்கு வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.