அக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..!

1

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப் படிவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் இதே பகுதியில், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப் படிவம் வழங்கப் படும் என்று ஒரு போர்டு எழுதி வைத்தார்கள். அது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. கல்வித் துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு நாள் படிவம் விநியோகம் என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். இந்நிலையில், படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அம்சம் இப்போது ஒரு பள்ளியில் பிரச்னையாக வெடித்துள்ளது.

இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும், கிறிஸ்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் முன்பு இந்துக்கள் சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கோவை ஸ்டேன்ஸ் நர்சரி பள்ளியில் LKG சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தில், பெற்றோர்கள் பள்ளியில் கற்றுத்தரப்படும் கிறிஸ்தவ போதனைகளை குழந்தைகள்
கற்றுக் கொள்வதற்கு ஒப்புக் கொள்கிறேன் என கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு, அதன்பின்பே படிவம் தரப்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போல் இந்துக்கள் நடத்தும் பள்ளியில் வலியுறுத்தினால் இந்த நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருப்பார்கள் போலி மதசார்பின்மைவாதிகள்….என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.

பொதுவாக சாஃப்ட்வேர் அல்லது திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றில் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறேன் என்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருக்கும். அது போல் கிறிஸ்துவப் பள்ளியிலும் இப்படி கையெழுத்திட்டு வாங்குவது கொடுமை என்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு கருத்துகளில்…

  • இந்து மாணவனுக்கு 3000 என்றால் முஸ்லீம் கிருத்தவருக்கு 25,000 ஸ்காலர்ஷிப் எதற்கு?

இந்து அல்லாதோர் சுலபமாக கல்வி நிலையம் தொடங்க சலுகை எதற்கு?

பிசி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என்ற கோட்டா எதற்கு? பிழைக்க விட்டால் எங்கள்
கோவில் எதற்கு என்று கேட்கும் அளவு வளர விட்டது மதசார்பின்மை பேசிய இந்துக்கள்  தவறு…

கிருஸ்தவராக மாறி sc கோட்டாவுக்காக இந்து என்று certificate ல் மட்டும் வைத்து ஏமாற்றுவோர் பலர்.

இது போன்ற வாசகங்களை இவர்களால் எப்படி எழுத முடிகிறது..? ஏன் இதை அரசின் கவனத்திற்கு ஹிந்து அமைப்புகள் எடுத்துச் செல்லக் கூடாது..?

நல்ல விஷயம்……. இதை முன்னுதாரணமாக காட்டி ஹிந்து கல்வி நிறுவனங்கள் ஹிந்து மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டை பாடத்திட்டத்தில் சேர்க்கவும்……

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...